துபாயில் தூள் கிளப்பிய அதிரை ABCC! இம்ரான் அவர்களின் அதிரடி ஆட்டத்தில் இறுதி போட்டிக்கு நுழைந்தது!

12435815_1002100736522633_952433177_nதுபாயில் DFCC நடத்தும் கிரிக்கெட் தொடர்போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பலம் வாய்ந்த கிளப் அணிகள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினரும் சிறப்பாக விளையாடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். நேற்றைய தினம் இறுதி சுற்றுக்கு முன்னேறும் அணியை தீர்மாணிக்கும் அரையிறுதி போட்டி துபாய் FESTIVCAL CITY மைதானத்தில் நடைபெற்றது. இதில் அதிரை ABCC அணியினர் எதிர் அணி பந்துவீச்சாளர்களில் பந்துகளை துவம்சம் செய்து நாளாபுறமும் பறக்க விட்டனர்.

குறிப்பாக அந்த அணியை சேர்ந்த இம்ரான் 31 பந்துகளை பிடித்து 5 சிக்ஸர்கள் 5 பவுன்டரிகளுடன் 63 ரண்களை குவித்தார். 20 ஓவர் முடிவடைந்து நிலையில் அந்த 210 ரண்களை குவித்தது.

வலுவான இலக்கை நோக்கி களமிறங்கிய முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி பெட்ஸ்மேன்களும் நல்ல துவக்கத்தை கொடுத்து சிறப்பாக விளையாடினாலும் 18.4 ஓவர்களில் 177 ரண்களை மட்டுமே குவித்து தோல்வியடைந்தனர். இதில் குறிப்பாக ABCC அணியை சேர்ந்த பத்தாஹ் பேட்டிங்கில் 38 ரண்களை குவித்ததுடன் பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இரண்டாவதாக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் DFCC அணியை எதிர்த்து  கலிபா cc அணியினர். இதில் கலிபா CC அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கலிஃபா CC அணியை எதிர்த்து அதிரை ABCC அணி வரும் வெள்ளிக்கிழமை அதே மைதானத்தில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.நாடு விட்டு நாடு சென்று அதிரையின் பெருமையை தங்கள் விளையாட்டின் மூலம் நிருபிக்கும் அதிரை ABCC அணியினரை அதிரை பிறை சார்பாஹ மனதார வாழ்த்துகிறோம்.

Close