காதிர்முகைதீன் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!!!

12435575_184906515192735_2089127732_nஅதிராம்பட்டினம் காதிர்முகைதின் கல்லூரியில் 1987 ஆண்டில் இருந்து 1990ம் ஆண்டுவரை கணினி அறிவியல் பாடப் பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் மாணவர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாணவர் வக்கீல் அசோக் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றியும் சார்ந்துள்ள துறைகளைப் பற்றியும் கலந்துரையாடினர். மேலும் சிறப்பு விருந்தினராக முன்னாள் கணினிதுறை தலைவர் பேராசிரியர் சாகுல்ஹமீது, காதிர் முகைதீன் கல்லூரி கணினி துறை தலைவர் பேராசிரியர் ஜெயவீரன், பேராசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்

Close