ஏர் இந்தியா விமானத்தில் இனி சைவம் தான்!!

download (1)ஏர் இந்தியா விமானத்தில் இனி சைவ உணவு மட்டுமே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வரும் புத்தாண்டு தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

ஏர் இந்தியா பொது மேலாளர் கேப்டன் டி எஸ் பைஸ் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: உள்நாட்டு விமானங்களில் 60 நிமிடம் முதல் 90 நிமிடம் வரை செல்லும் விமானங்களில் ( எக்கனாமிக்கல் ) இனி சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் . இது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும் மதிய உணவு மற்றும் இரவு நேர உணவின் போது இனி காப்பி, டீ வழங்க வேண்டாம் ,இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது .

இது குறித்து விமான ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்: ஒன்று முதல் ஒன்றரை மணி நேர பயணத்தில் உணவு பரிமாறி முடிக்கவே 30 முதல் 40 நிமிடம் ஆகி விடுகிறது , இது எங்களின் பணிக்கு சிரமத்தைதான் ஏற்படுத்துகிறது என்றார் .
பயணி விபுல் சாக்சேனா என்பவர் கூறுகையில் ; நான் சமீபத்தில் மும்பையில் இருந்து ஜாம்நகருக்கு பயணித்தேன் , காபி, டீ கூட இப்போதே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் நான் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன் , இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மெயில் அனுப்பியுள்ளேன் என்றார் . மற்றொரு பயணியான விக்ரம நாயர் கூறுகையில்; பயணிகளுக்கு உணவு தேர்வு செய்யும் ஒரு வாய்ப்பை ஏர் இந்தியா மறுத்திருப்பது கவலை அளிக்கிறது என்றார் .

Close