அதிரையில் சிறப்பாக நடைபெற்ற CBD மாவட்ட துவக்க விழா (படங்கள் இணைப்பு)…

cbdCRESCENT BLOOD DONORS தஞ்சாவூர் மாவட்ட துவக்க விழா இன்று (26-12-2015) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் அதிரை சாரா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு CBD மாவட்ட தலைவர் பேராசிரியர்.K.செய்யது அஹ்மத் கபீர் அவர்களின் தலைமையிலும்,CBD மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் துவங்கியது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் திரு.M.ஜேம்ஸ் அவர்களும், அய்யம்பேட்டை PAASAMALAR WELFARE ASSOCIATION ஒருங்கிணைப்பாளர் ஜனாப்.PJA.முகம்மது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு இரத்ததானம் குறித்து சிறப்புரை ஆற்றினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இரத்ததானம் கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டன.

CBD சாதனைகள் ஓர் பார்வை :

*கடந்த வருடம் செப்டம்பர் 1 ம் தேதி சென்னையில் இளைஞர்களால் துவங்கப்பட்ட ஒன்று தான் CRESCENT BLOOD DONORS என்ற அமைப்பு.

*CRESCENT BLOOD DONORS துவங்கிய ஒரு வருடத்தில் 4000 யூனிட் இரத்த தானம் செய்து இருக்கிறார்கள் உறுப்பினர்கள்.இதில் முக்கிய விசயம் இரத்ததானம் செய்தவர்களில் 40% மாணவிகள்.

*மேலும் நம் தஞ்சை மாவட்டத்தில் CBD சிறப்பாக செயல்பட்டு வருகிறது .தஞ்சை மாவட்டத்தில் துவங்கிய சில மாதத்தில் கிட்டத்தட்ட 70-க்கும் மேற்ப்பட்ட யூனிட்கள் தானம் செய்து இருக்கிறோம்.

*இரத்ததானம் மட்டும் அல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுதல்,கடற்கரையை,ஆறுகள் தூய்மைப்படுத்துதல்,விபத்து நேரத்தில் உதவுதல்,ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி போன்ற செயல்களில் இடுப்பட்டு வருகிறது இந்த CBD குழு.மேலும் தற்போது சென்னையில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள்,மருத்துவ முகாம்கள் செய்து இருக்கிறோம்.

Close