அதிரையர் தலைமை வகித்த அபுதாபியில் நடைப்பெற்ற காயிதேமில்லத் ஆவண படி வெளியீட்டு விழா ஆலோசனை கூட்டம்!

அபுதாபியில் கண்ணியத்திற்குரிய  காயிதேமில்லத்  அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா நிகழ்வு குறித்த ஆலோசனைக்கூட்டம்.

டிசம்பர் 4  வியாழக்கிழமை மாலை அபுதாபியில்  கண்ணியத்திற்குரிய  காயிதேமில்லத் அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா சம்பந்தமாக
காயிதேமில்லத் பேரவை மற்றும் அய்மான் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் 23-11-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை அபுதாபியில் உள்ள  காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர்  லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்க்கு அய்மான் சங்கத் தலைவர், அதிரை ஷாஹீல் ஹமீது தலைமை வகித்தார். காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர்,  லால்பேட்டை மௌலவி  அப்துர்ரஹ்மான் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் அய்மான் சங்க பொதுச்செயலாளர்
காயல் SAC ஹமீது, காயிதேமில்லத் பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை அன்சாரி,அய்மான் சங்கத்தின் ஷேக்கான், ஜமால்,கொள்ளுமேடு மௌலவி ஹாரிஸ்,காயிதேமில்லத் பேரவை உறுப்பினர்  லால்பேட்டை சல்மான் ஆகியோர் கலந்துக்கொண்டு ஆவணப்படம் வெளியீட்டு விழா சம்பந்தமாக தங்களின் கருத்துக்களை வழங்கினர்.
இக்கூட்டத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இறுதியாக காயிதேமில்லத் பேரவையின் முஸஃப்பா பகுதி அமைப்பாளர் முஹையத்தீன் அப்துல் காதர் நன்றி கூறினார்.

தகவல்: லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில்

Advertisement

Close