பாக், ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு!!

Afghanistan-Pakistan-map.php_பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக 89 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவானது. தஜிகிஸ்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். ஆப்கனில் 30 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நிலஅதிர்வு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 59 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

பாகிஸ்தான், லாகூர் நன்கா சாஹிப், பைசலாபாத், சர்கோதா, ஷேய்க்புரா, முல்தான், சியல்காட், குஜராத், ஜெஷூலும், முர்ரி, மலாகண்ட், சர்சடா, ஸ்வட் மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இந்தியாவின் பஞ்சாப், அரியானா, டெல்லி மற்றும் வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. காஷ்மீரில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் இறந்தார் என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

Close