துபாயில் கிராஅத் போட்டியில் முதல் பரிசை வென்ற அதிரையை சேர்ந்த உடன் பிறந்த சகோதர சகோதரிகள்!

nmமுதல் பரிசுகளை வென்று ஆச்சிரியத்தில் ஆழ்த்திய அதிரை உடன் பிறந்த சகோதர – சகோதரி துபையில் கடந்த 18.12.2015 அன்று இம்தாதுல் முஸ்லிமீன் சங்கத்தின் 39 ஆண்டு நிறைவு விழா துபாய் கல்ப் மாடல் ஸ்கூல் அரங்கில் நடை பெற்றது இதில் அமீரக அளவிலான கிராத் போட்டி நடை பெற்றது 60 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டினர் இப்போட்டியில் மேலதெரு அதிரை அப்துல் ஹாதி அவர்களின் குழந்தை சுமையா அப்துல் ஹாதி பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசை வென்றார் .

ஆண்களுக்கான போட்டியில் பார்வையாளர் வரிசையில் தாயின் மடியில் அமர்ந்து கிராத்தை கேட்டுக்கொண்டிருந்த முஹம்மது ஈஸா அப்துல் ஹாதி மேடைக்கு தன் சகோதரியுடன் சென்று கிராத் ஓதி முதல் பரிசை தட்டி சென்றார் . அப்துல் ஹாதியின் மற்றொரு குழந்தை ஆயிஷா அப்துல் ஹாதி ஆறுதல் பரிசை வென்றார். முதல் பரிசை பெற மேடைக்கு தன் தந்தையுடன் வந்த முஹம்மத் ஈசாவை மீண்டும் ஓத சொன்னார்கள் அங்கிருந்த நடுவர்கள் மற்றும் விழா குழுவினர்கள் தன் இனிமையான குரலில் ஓதி அனைவருடைய துவா க்களையும் பெற்றுக்கொண்டார் .

இந்த நிகழ்ச்சியை காண 500 க்கும் மேற்பட்டோர் அபுதாபி , சார்ஜாஹ் , ராஸ் அல் கைமாஹ் மற்றும் அமீரகத்தின் பல பகுதிகளிலும் வந்து கலந்து கொண்டனர்.

Close