அதிரையர்களே! கல்யாண வீட்டில் உங்கள் வெள்ளை கைலி, துப்பட்டி கரையாகிவிட்டதா???

cleaning_tips_006துணிகளில் படியும் கறைகளிலேயே மிகவும் மோசமான கறை தான் மஞ்சள் நிற குழம்புக் கறை. பொதுவாக இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில், சமைக்கும் போது மஞ்சள் தூள் அதிகம் சேர்க்கப்படும். அப்படி சேர்க்கப்படும் மஞ்சளின் கறையானது துணிகளில் படிந்தால், அவை அவ்வளவு எளிதில் போகாமல், அப்படியே இருந்து துணியை பாழ்படுத்தும்.

அதிலும் வெள்ளை நிற உடையில் குழம்புக் கறை படிந்தால், மீண்டும் அந்த உடையை அணியவே முடியாமல் போய்விடும். ஆனால் அப்படி துணிகளில் படியும் மஞ்சள் நிற குழம்புக் கறையை ஒருசில எளிய பொருட்களைக் கொண்டு ஈஸியாக நீக்கலாம். இங்கு அந்த பொருட்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

குறிப்பு: துணிகளில் மஞ்சள் நிற குழம்புக் கறை படிந்தால், அப்போது உடனே ஓடும் நீரில் அலச வேண்டும். இல்லாவிட்டால், வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை முயற்சியுங்கள்.

கிளிசரின்

கறை படிந்த துணியை துவைக்கும் முன், கிளிசரினை கறை படிந்த இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, சோப்பு நீரில் ஊற வைத்து அலசினால், கறைகளானது சீக்கிரம் போய்விடும்.

வினிகர்வெள்ளை வினிகரைப் பயன்படுத்தி கூட மஞ்சள் நிற குழம்பு கறையை போக்கலாம். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை, 1 டேபிள் ஸ்பூன் டிஷ் வாஷ் நீர்மம் மற்றம் 2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, கறை படிந்த துணியை அதில் ஊற வைத்து துவைக்க வேண்டும்.

சுடுநீர் அல்லது குளிர்ந்த நீர்காட்டன் துணியில் படிந்த மஞ்சள் நிற கறையை போக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கறையானது நன்கு காய்ந்துவிட்டால், அதனை போக்குவது கடினம். எனவே கறை படிந்த இடத்தில் சுடுநீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ சிறிது நேரம் ஊற வைத்து, பின் சோப்பு பயன்படுத்தி தேய்த்தால், கறைகள் விரைவில் நீங்கிவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றில் சிறிது வினிகரை ஊற்றி கலந்து, அந்த கலவையைக் கொண்டு துணியில் உள்ள கறை படிந்த இடத்தை தேய்த்து, பின் சோப்பு நீரில் ஊற வைத்து துவைத்தால், கறைகள் போய்விடும்.

Close