கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம் ஸ்பைஸ் ஜெட் புதிய “ஆபர்”!!

20151228070328கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய “ஆபர்”இந்தியாவில் தனியார் விமான நிலையமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் ஒருவழி பயணம் செய்ய புதிய 4 நாள் டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.புத்தாண்டு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ள 4 நாட்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அறிவித்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுகுறித்து தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் ஏப்ரல் 12 வரை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மிகக் குறைந்த கட்டணமாக ரூபாய் 716 செலுத்தி ஒருவழி பயணம் செய்யலாம் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று துவங்கப்பட்ட இந்த சலுகை வரும் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வழி பயணத்திற்கான ரூபாய் 716 கட்டணத்தில் வரிசலுகை ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு www.spicejet.com இணையதளத்தை அணுகலாம் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close