பட்டுக்கோட்டை அருகேவீட்டுக்கு தீ வைப்பு: ஒருவர் கைது!!

residential-fire-system1பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி எலிசபெத் (54). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவருக்கும் நடைபாதை தகராறு காரணமாக.

முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஜெயக்குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது மைக்கேல்ராஜ் மகன் ஜெயசிங், அதே ஊரைச் சேர்ந்த ஆல்பர்ட் தாவீது மகன் ஜோயல் ஆகிய இருவரும் சேர்ந்து ஜெயக்குமாரின் கூரை வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடி விட்டனராம்.

இதில் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.

இதுகுறித்து எலிசபெத் சனிக்கிழமை அளித்தப் புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து ஜெயசிங்கை (24) கைது செய்தனர். தலைமறைவான ஜோயலை தேடி வருகின்றனர்.

Close