சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பக்ரைன் செல்ல முயன்றவர் கைது!!

Chennai-airport-nightசென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பக்ரைனுக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த வெற்றிவேல் (வயது 40) என்பவர் வந்திருந்தார்.

அப்போது குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு போலியான முத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் வெற்றிவேலின் விமான பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய போலீசில் ஓப்படைத்தனர். பின்னர் விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் வெற்றிவேல் மீது போலி பாஸ்போர்ட்டு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Close