தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு!!

rain81113-01தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெய்துவரும் கன மழையால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளதால் பேரிடர் தடுப்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோன்ற கன மழை அடுத்த 24 மணி நேரங்களில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொடரும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் மேலும் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. அம்மாவட்ட கலெக்டர் எம்.ரவிக்குமார், இன்று ஆய்வு கூட்டம் நடத்தி, பேரிடர் தடுப்பு பற்றி ஆலோசித்தார். தூத்துக்குடியில், இன்று காலை கன மழை பெய்த நிலையில், மாலையில் லேசான சாரல் விழுந்தது. தேசிய பேரிடர் மீட்பு படை தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. 83 இடங்களில், மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


Close