பட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு!

stock-photo--d-white-people-car-thief-isolated-white-background-185399714 (1)பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வாடகைக்கார் உரிமையாளர் ஆர். சரவணன் (35). பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலுள்ள வாடகைக்கார்கள் நிறுத்துமிடத்தில் தனக்குச் சொந்தமான ரூ. 4 லட்சம் மதிப்புள்ள காரை வாடகைக்கு ஓட்டி வந்தார்.

இந்நிலையில், 23.8.2015 அன்று சரவணனிடம் சென்னையைச் சேர்ந்த அன்பு (30) என்பவர் தன்னை கார் ஓட்டுநராக சேர்த்துக் கொள்ளும்படி கூறினாராம். அந்த நபர் தனது ஓட்டுநர் உரிமத்தையும் சரவணனிடம் கொடுத்துள்ளார். இதை நம்பிய சரவணன் அந்த நபரை தனது கார் ஓட்டுநராக வைத்துக் கொண்டார்.

அந்த நபர் கடந்த 31.8.2015-ம் தேதி மாலை காருடன் மாயமாகி விட்டாராம். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த நபர் சரவணனிடம் கொடுத்திருந்த கார் ஓட்டுநர் உரிமமும் போலியானது என்பது தெரியவந்தது.

இதுபற்றி சரவணன் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை நகர குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதில் காரை திருடிச் சென்ற நபர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Close