கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்!!

download (3)கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்வடகிழக்கு பருவமழை 31-ந் தேதி முடிகிறது. நேற்று முன்தினம் தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

இன்றைய வானிலை குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், இலங்கை அருகே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. அதன் காரணமாக இன்று (புதன்கிழமை) தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

ராமேசுவரம் , பாபநாசம் தலா 7 செ.மீ., பாம்பன் 5 செ.மீ., மணிமுத்தாறு 4 செ.மீ., ராமநாதபுரம், நாங்குநேரி தலா 3 செ.மீ., செங்கோட்டை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி தலா 2 செ.மீ., பாளையங்கோட்டை, முதுகுளத்தூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Close