தே.மு.தி.க. நகர செயலாளர் உள்பட 13 பேர் கைது!!!

201512300129182362_DMDK-City-Secretary-13-people-Arrested_SECVPFதஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் முன்னிலையில் முதல்-அமைச்சர்ஜெயலலிதா படம் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக தே.மு.தி.க. நகர செயலாளர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை தமிழக அரசு வழங்கக்கோரி தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் தலைமையில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மேடை அருகே பயணிகள் நிழலகத்தில் இருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை தே.மு.தி.க. தொண்டர்கள் சேதப்படுத்தினர்.

இது குறித்து தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. ரெங்கசாமி, தஞ்சை நகர கிழக்குப்போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போலீசார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ் (தஞ்சை தெற்கு), த.லோ.பரமசிவம் (தஞ்சை வடக்கு), தஞ்சை நகர செயலாளர் அடைக்கலம், நகர அவைத்தலைவர் அமர்நாத், மாவட்ட இளைஞரணி செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் புஷ்பராஜ், செந்தில்குமார் உள்பட 59 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

13 பேர் கைது

இது தொடர்பாக தே.மு.தி.க. நகர செயலாளர் அடைக்கலம் (தஞ்சை), பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் மனுநீதிசோழன், நிர்வாகிகள் அருணாசலம், ராஜேஷ்கண்ணன், முருகேசன், சத்தியமூர்த்தி, பெரியசாமி, பழனிவேல், பாலமுருகன், மவுனகுரு, பழனிவேல்அஞ்சான், சதாசிவம், மணிமாறன் ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 13 பேரையும் போலீசார் தஞ்சை ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு மூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் கைது செய்யப்பட்ட 13 பேரையும் வருகிற 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 13 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

Close