Adirai pirai
posts

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து!

dubai-burjhalifa_3184658bதுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான புரூஜ் கலிபா அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.அப்போது 20-வது மாடியில் இருந்து திடீரென தீ குபுகுபுவென பற்றி எரிந்தது. இந்த தீ விடுதியின் அனைத்து தளங்களுக்கும் பரவியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தீ விபத்து வானவேடிக்கையின் போது வெடித்த பட்டாசுகளிலிருந்து வந்த தீப்பொறி பற்றி இருக்கலாம் என துபாய் போலீசார் கருதுகின்றனர். இது குறித்து நேரில் கண்ட சிலர் கூறியதாவது சிலிண்டர் வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாம். இதனால் தீ குபுகுபுவென எரிவது குறித்து அறிந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து விடுதிகளும் மூடப்பட்டது.

விபத்தில் இவ்விபத்தில் 14 பேர்களுக்கு சிறிய தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று துபாய் பாதுகாப்பு துறை தலைவர் மேஜர் ஜெனரல் ரஷெத் அல்-மத்ருஷி தெரிவித்தார். இருப்பினும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துபாயில் 830 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 160 அடுக்குமாடி கட்டிடத்தில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டிற்கு முன்பாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.