ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் பான் கார்டு கட்டாயம்: இன்று முதல் அமல்!!

o-PAN-CARD-facebookரூ.50 ஆயிரத்திற்கு மேல் அளவுக்கு மேல் பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு பான் கார்டை (நிரந்தர கணக்கு எண்) கட்டாயம் வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரே தவனையில் ரூ.50 ஆயிரத்திற்கு பண பரிவர்த்தனைகள் செய்தால் பான் கார்டு கட்டாயம் என்ற விதி அமல்படுத்தப்படவுள்ளது. ஒரே தவனையில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் வங்கியில் பணம் செலுத்தும் போதும், வங்கியில் ஆண்டு பண பறிமாற்றம் ரூ.5 லட்சத்தை தாண்டினாலும் பான் கார்ட் அவசியமகிறது.

அதேபோல் ரூ. 2 லட்சத்திற்கு மேல் நகைகள் வாங்கும் போதும் பான் கார்ட் அவசியம். மேலும் ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆயிரத்திற்கு மேல் அசையா சொத்துகள் வாங்குவதற்கும் பான் கார்ட் கட்டாயம்.

Close