துபாயில் தொடரும் அதிரை ABCC யின் சாதனைப் பயணம்! 20 ஓவர்களில் 313 ரண்களை குவித்து தொடரை கைப்பற்றியது!

துபாயில் DFCC நடத்தும் கிரிக்கெட் தொடர்போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பலம் வாய்ந்த கிளப் அணிகள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினரும் சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதிப்போட்டியில் கலிஃபா CC அணியை எதிர்த்து அதிரை ABCC அணி மோதியது. இதில் முதலில் பேட் செய்த அதிரை ABCC அணியினர் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாளைபுறமும் பறக்கவிட்டனர். குறிப்பாக அந்த அணியை சேர்ந்த சமீமுத்தீன் மற்றும் அஸ்லம் ஆகியோர் சதம் விளாசினர். இறுதியில் 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டை இழந்து 313 ரண்களை எடுத்தது.

20 ஓவர்களுக்கு 313 ரண்களை குவித்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய கலிபா CC அணியினர் சிறப்பாக மட்டைப்பணியை செய்தனர். இருப்பினும் இமாலய இலக்கான 313 ரண்களை குவிக்க முடியாமல் 6 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களுக்கு 215 ரண்களை மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது.

துபாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆட்டோ ட்ரேடர்ஸ் கோப்பையை கைப்பற்றிய அதிரை ABCC அணி இந்த தொடரையும் கைப்பற்றி அதிரைக்கு பெருமை சேர்த்தது.

Close