மானியம் இல்லா சிலிண்டர் விலை கடும் உயர்வு!!!

gas cylinderமானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக இன்று சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலை தில்லியில் ரூ.657.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.671 ஆகவும், மும்பை மற்றும் சென்னையில் ரூ.671.50 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி சிலிண்டர் மானியம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Close