அதிரை சூப்பர் லீக் கால்பந்து தொடர் போட்டியின் சுழற்கோப்பையை கைப்பற்றியது AFFA அணி!

aclஅதிரை SSM குல்முஹம்மது நினைவாக கடற்கரைத்தெரு மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பானியிலான உள்ளூர் கால்பந்து அணிகள் கலந்துக்கொண்டு விளையாடும் அதிரை சூப்பர் லீக் என்னும் மாபெரும் கால்பந்து தொடர் போட்டிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றது. இதில் அதிரையை சேர்ந்த பல்வேறு உள்ளூர் அணிகள் கலந்துக்கொண்டு விளையாடினர்.

இதில் சிறப்பாக விளையாடிய அதிரை SSMG அணியினரும் அதிரை AFFA அணியினரும் இறுதி சுற்றுக்கு முன்னேரினர். இதன் இறுதி போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் அதிரை AFFA அணியினர் அபாரமாக ஆடி 2 கோல்களை அடித்து 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை கைப்பற்றினர். அதிரை AFFA அணியின் சார்பாக சஃபானுத்தீன், அஷ்ரப் ஆகியோர் தலா 01 கோல் அடித்தனர்.

படங்கள்: இஸ்மாயில்

Close