செங்கிஸ்கான் உடல் நாளை அஸர் தொழுகைக்கு பிறகு ராயப்பேட்டை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்!

sengis

தமிழக அளவில் பிரபல மார்க்க அழைப்பாளரும், நூற்றுக்கணக்கான மக்களை இஸ்லாமியர்களாக நேர்வழிப்படுத்தியவரும், மஸ்ஜிதுல் முஃமின் நிறுவனருமான சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் சற்றுமுன்னர் வஃபாத் ஆனார்கள். இது குறித்து நான் செங்கிஸ்கான் அவர்களின் தனிப்பட்ட அலைப்பேசிக்கு தொடர்பு கொண்டேன். அவர்களுடைய உறவினர் ஒருவர் போனை எடுத்து கண்ணீருடன் செங்கிஸ்கான் அவர்களின் உடல் நாளை அஸர் தொழுகைக்கு பிறகு சென்னை ராயப்பேட்டை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பாடுவதாக அறிவித்தார்.

இவர் பல கட்டங்களில் அதிரை பிறைக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சற்றுமுன்னர் கூட புத்தாண்டு குறித்து முகநூலிலும் வாட்ஸ அப்பிலும் பகிர்ந்தார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

நான் எங்கிருந்தாலும் மரணம் நம்மை அடைந்தே தீரும்…

-நூருல் இப்னு ஜஹப்ர் அலி (ஆசிரியர், அதிரை பிறை)

Close