மாநில அளவிலான கால்பந்து தொடரில் அதிரை அணி 2ஆம் இடம்!

அஃப்தமிழக மாநில அளவிலான 11 வீரர்களுக்கான கால்பந்தாட்ட தொடர்போட்டி தஞ்சாவூர் அண்ணை சத்திய விளையாட்டு அரங்கத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் மாநில அளவிலான தலைசிறந்த அணிகள் கலந்துக்கொண்டு விளையாடி வந்தனர். இதில் அதிரை ப்ரண்ட்ஸ் அணி கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இன்று நடைபேற்ற இறுதி சுற்று போட்டி தஞ்சை அருள் கால்பந்தாட்ட அணியை எதிர்த்து மோதியது. இதில் தஞ்சை அருள்ஸ் அணியினர் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றனர். இறுதி போட்டிக்கு முன்னேரிய அதிரை ப்ரண்ட்ஸ் அணிக்கு ரண்ணர்ஸ் பரிசுத்தொகை ரூபாய் 6000 வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Close