அதிரையில் விரைவில் முதியோர் இல்லம் துவங்க திட்டம்!

அம்அதிரை புதுமணைத்தெரு பகுதியில் விரைவில் முதியோர் இல்லம் துவங்க உள்ளனர். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றனர். அதிரையை சேர்ந்த அஹமது அன்சாரி அவர்களின் முயற்சியில் இந்த முதியோர் இல்லம் துவங்கப்பட உள்ளது. இது குறித்து இதற்கான பணியில் ஈடுபட்டு வரும் முஹம்மது மொஹுசீன் அவர்கள் நம்மிடம் கூறியதாவது, நமதூரில் பல பகுதிகளில் மன நலம் பாதிக்கப்பட்ட முதியவர்கள், பராமறிப்பின்றி தெருக்களில் அலைந்து கொண்டிருக்கும் முதியவர்களை பாதுகாக்க அவர்களின் நலன் கருதி இந்த முதியோர் இல்லம் துவங்கப்பட உள்ளது. இதற்கான நிர்வாகிகள் மற்றும் முழு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Close