அதிரை இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற SDPI தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்!

SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 03.01.2016 அன்று விரகுறிசில் நடைபெற்றது.

sdpiமாவட்ட செயற்குழு பட்டுக்கோட்டை வீரகுறிசில் மாவட்ட தலைவர் Z.முஹமது இலியாஸ் அவர்கள் தலைமை நடைபெற்றது .

கூட்டத்தின் துவக்க சிற்றுரை மாவட்ட பொது செயலாளர் சகோ. J.ஹாஜி ஷேக் நிகழ்த்தினர் .

இந்த கூட்டத்தில் வருகிற ஜனவரி முதல் துவங்க உள்ள உறுப்பினர் சேர்க்கை, மற்றும் சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல் பற்றியும் , வரும் காலங்களில் கட்சின் பணிகளை வீரியத்துடன் எடுத்து செல்வது பற்றியும் முழுமையாக விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்சியில் மாவட்ட பொருளாளர் M.ஷேக் ஜலால், SDTU மாவட்ட தலைவர் A.அமானுல்லா, வர்த்தக அணி தலைவர் J.செய்யது முஹமது முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி, நகரம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இறுதியாக தோழர். குழந்தை சாமி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர்

தகவல்: SDPI மதுக்கூர்

Close