தூத்துக்குடியில் ரூ.50 ஆயிரத்துக்கு ஆண் குழந்தை விற்பனை தாய், 3 புரோக்கர்களிடம் விசாரணை!!

Tamil_DailyNews_1514812707902 copyதூத்துக்குடியில் ரூ.50 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்பனை செய்த தாய் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாதவன். இவரது மனைவி கலைசெல்வி(38). இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடைசி ஆண் குழந்தை கடந்த 9.10.2015ல் பிறந்தது. வறுமையால் குடும்பச் செலவை சமாளிக்க முடியாமல் மாதவன் திணறினார்.இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பகுதியில் துணிகள் விற்கும் திருவிகநகரை சேர்ந்த மூதாட்டி சூரம்மாள் உள்ளிட்ட சிலரது அறிமுகம் கலைசெல்விக்கு ஏற்பட்டது. ‘தங்களுக்கு தெரிந்த ஒரு தம்பதிக்கு குழந்தை தேவைப்படுவதாகவும், உனது குழந்தையை கொடுத்தால் அதிக பணம் கிடைக்கும் என்று அவர்கள் கலை செல்வியிடம் ஆசை வார்த்தை கூறினர்.

இதை நம்பிய அவர் ரூ.50 ஆயிரத்துக்கு தனது ஆண் குழந்தையை விலை பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மூத்த மகளுடன் சென்று சூரம்மாள் தரப்பினரிடம் குழந்தையை கலைச்செல்வியை கொடுத்தார். இந்நிலையில் நேற்று தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, ‘தனது குழந்தையை வாங்கியவர்கள் உறுதியளித்தது போல பணம் தரவில்லை’ என்றும் கலைச்செல்வி புகார் கொடுத்தார். இதனையடுத்து துரித விசாரணையில் இறங்கிய போலீசார் கலைச்செல்வி மற்றும் புரோக்கர்களாக செயல்பட்ட சூரம்மாள் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் நாகர்கோவிலை சேர்ந்த சிவலிங்கம் என்பவரிடம் ரூ.50 ஆயிரத்திற்கு குழந்தையை விற்றது தெரியவந்தது.

குழந்தையை மீட்க அனைத்து மகளிர் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.பேசியதுபோல பணம் தரவில்லை என குழந்தையை விற்ற கலைச்செல்வியும், கூடுதலாக பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக குழந்தையை வாங்கியவர்களும் தெரிவித்ததால். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி பிரையன்ட்நகர் 10வது தெருவில் ஒரு குழந்தையை விற்பனை செய்த பிறகு அதில் பிரச்னை ஏற்பட்டு சிலர் சிக்கினர். பெற்ற குழந்தைகளை பணத்துக்காக விற்பனை செய்யும் சம்பவம் தூத்துக்குடியில் அதிகரித்து வருகிறது.

Close