அதிரை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !!!

03-1435896582-rumour-on-linking-aadhar-number-in-ration-card-panics-public-600ரேஷன் கடைகளில் ஆதார் எண் தெரிவிக்க உத்தரவு: பயனாளிகளை குறைக்க திட்டமா?

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி ரேஷன்கடைகள் மூலம் நடந்து வருகின்றது. இந்த ரேஷன் கடைகள் அனைத்தும் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வருகிறது. தற்போது ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இது தவிர மண்ணெண்ணெய், பாமாயில், பருப்பு, சர்க்கரை, கோதுமை, பச்சரிசி உள்ளிட்டவையும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டு வடிவில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக உள்தாள் மூலமே ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்த வருடத்துக்கான உள் தாள் ஏற்கனவே கடந்த வருடம் ஒட்டப்பட்ட போதே சேர்த்து ஒட்டப்பட்டு விட்டது. எனவே இந்த வருடமும் புதிய ரேஷன் கார்டு இல்லை.

ஏற்கனவே ரேஷனில் தற்போது பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக மண்ணெண்ணெய், பாமாயில், பருப்பு வகைகள் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களிடம் ஆதார் எண் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என கூறி உள்ளனர். நுகர்வோர்கள் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். அந்த எண்ணை அவர்களுக்கான பதிவேட்டில் பதிய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. தற்போது பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களிடம் கண்டிப்பாக ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்கள் கூறி உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை ஆதார் அட்டை வழங்கும் பணி இன்னும் முழுமை அடைய வில்லை. பல குடும்பங்களில் மனைவிக்கு ஆதார் எண் வந்துள்ளது. ஆனால் கணவருக்கு ஆதார் எண் இல்லை. குடும்ப தலைவரின் ஆதார் எண் கண்டிப்பாக வேண்டும் என ரேஷன் கடைகளில் கூறுவதால், ஆதார் எண் இல்லாதவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சில ரேஷன் கடைகளில் இலவச அரிசி பெற வேண்டுமானால் உடனடியாக ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

இதனால், ஆதார் எண் இல்லா விட்டால் ரேஷன் பொருட்கள் கிடைக்காதோ? என்ற பீதி மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. மேலும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்க ஆதார் எண் கேட்கிறார்களோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Close