சாலை வசதியின்றி தவிக்கும் அதிரை C.M.P. லேன் பகுதி மக்கள்!

அதிரை சி.எம்.பி லேன் 21 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதியில்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சாலை வசதி இல்லாத காரணத்தால் வருடா வருடம் மழை காலங்களில் இப்பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றைய தினம் அதிரையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக இப்பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

சாலையில் தேங்கியுள்ள தண்ணீரினால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதனால் இப்பகுதியில் கொசுத் தொல்லையும் அதிகமாகியுள்ளது.

எனவே இப்பகுதி மக்களின் நலனில் கருத்தில் கொண்டு இப்பகுதிக்கு தரமான சாலை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

படங்கள்: பிலால்(அதிரை பிறை)

Advertisement

Close