Adirai pirai
INFORMATION posts

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!!

Exams-Juan-V-Lopez

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு காலை 9.15 முதல் 1.15 மணி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 9.15 முதல் 12 மணி வரை நடைபெறும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை:

மார்ச் 4 – தமிழ் முதல் தாள்

மார்ச் 7 – தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 9 – ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 10 – ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 14 – வேதியியல், கணக்கியல்

மார்ச் 17 – வணிகவியல், வீட்டுப்பாடவியல், புவியியல்

மார் 18 – கணிதம், விலங்கியல்

மார்ச் 21 – கணினி அறிவியல் , இந்தியக் கலாசாரம்

மார்ச் 23 – அரசியல் அறிவியல்

மார்ச் 28 – உயிரியல், தாவரவியல், வணிகக் கணிதம்

ஏப்ரல் 1 – இயற்பியல், பொருளாதாரம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

மார்ச் 15 – தமிழ் முதல் தாள்

மார்ச் 16 – தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 22 – ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 29 – ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 4 – கணிதம்

ஏப்ரல் 7 – அறிவியல்

ஏப்ரல் 11 – சமூக அறிவியல்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy