திருச்சி அருகே மீண்டும் ஒரு கடத்தல் சம்பவம்! கடத்தல்காரர்களிடம் நைசாக தப்பிய முஹம்மது என்ற சிறுவன்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 6-ம் வகுப்பு மாணவன் கடத்தபட்டுள்ளான். 3 பேர் கொண்ட கும்பல் முகமது மற்றும் சிவபாலனை ரயில் நிலையம் அழைத்து சென்றுள்ளது. 

மர்ம நபர்கள் மீது சந்தேகம் கொண்ட மாணவன் முகமது அங்கிருந்து தப்பித்து வீடு வந்துள்ளான். மாணவன் தந்த வாக்கு மூலத்தில் மற்றொரு மாணவன் சிவபாலனை போலீஸ் தேடுகிறது.

திருச்சியில் கடந்த 4ம் தேதியன்று ஹர்சத் கான் என்ற 2 வயது சிறுவன் கடத்தப்பட்டு கண்டிபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் நடைப்பெற்றுள்ள மற்றுமொரு கடத்தல் சம்பவம் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Close