அதிரை இளைஞருக்கு சிறந்த கேஷியருக்கான விருது வழங்கி கவுரவித்த துபாய் நிறுவனம்

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் அபூபக்கர். இவருடைய மகன் சமீர் அஹமது. துபாய் தெய்ரா சிட்டியில் உள்ள கேரிஃபோர் ஹைபர் மாக்கெட்டில் கேஷியராக பணி புரிந்து வருகிறார். தன்னுடைய பணியை நேர்மையாகவும், சிறப்பாகவும் செய்தகாரணத்தால் இன்று காலை அந்த நிறுவனத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவருக்கு அந்நிறுவனத்தின் பொதுமேலாளரால் சிறந்த கேஷியருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதினை பெற்ற சமீர் அவர்களுக்கு சக பணியாளர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.sameer

Close