ஜம்மு காஷ்மிர் முதலமைச்சர் முஃப்தி முஹம்மது சயீத் மரணம்!

muftiகடந்த மாதம் டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

79 வயதாகும் முப்தி முகமது சயீத், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி  தொடங்கி, 2002ல் ஆட்சியை பிடித்தார். அதன் பின், பாஜக உடன் கூட்டணி அமைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் முதலமைச்சரானார்.

வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

முப்தி முகமது சயீத் மறைவையடுத்து, அடுத்த முதலமைச்சராக அவரது மகள் மெகபூபா  பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்தி முகமது சயீத் மறைவுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

Close