அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து அதிகரிப்பு !(படங்கள் இணைப்பு)

சில தினங்களாக வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வந்தது .
 
அதிரை கடலோர பகுதிகளில் கடல்  சீற்றம் அதிகரித்து வந்தது. பலத்த மழையும் தொடர்ந்து பெய்தது. இதனால் அதிரையை மற்றும் சுற்று வட்டாரத்தில்   உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்கு செல்லவில்லை.

இதனை அடுத்து இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர் .இதனால் அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் காலஞ்சுற ,கேலகன் ,தேச பொடி,பண்ணா,கொடுவா மீன்கள்,நண்டுகள் ,இறால்கள் என அதிகமாக காணப்பட்டது. 


 படங்கள் மற்றும் செய்தி : 
முஹம்மது பிலால் (அதிரை பிறை )

Advertisement

Close