உம்ரா செல்ல ஈரானியர்களுக்கு தடை!

20160110144118சவூதி அரேபியாவில், அரசுக்குஎதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட ஷியா பிரிவுத் தலைவருக்கு கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் ஈரானில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களின்போது தலைநகர் டெஹ்ரானிலுள்ள சவூதி தூதரகத்துக்கு தீ வைக்கப்பட்டது.அதையடுத்து, ஈரானுடனான தூதரக உறவை சவூதி அரேபியா முறித்துக் கொண்டது.பதிலுக்கு சவூதி பொருள்களைஇறக்குமதி செய்ய ஈரான் தடைவிதித்தது.

இந்தச் சூழலில், யேமனிலுள்ள ஈரான் தூதரகம் மீது சவூதி அரேபியா விமானத் தாக்குதல் நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

“உம்ரா’ புனிதப் பயணத்துக்கு ஈரான் தடை! ஈரானுக்கும் – சவூதி அரேபியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் ஒரு பகுதியாக தங்கள் நாட்டு மக்கள் சவூதி அரேபியாவிலுள்ள மக்காவுக்கு “உம்ரா’ புனிதப் பயணம் மேற்கொள்ள ஈரான் தடை விதித்துள்ளது.அந்தப் புனிதப் பயணம் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படுவதாகும்.அந்தப் புனிதப் பயணம் மேற்கொள்ள தங்கள் நாட்டினருக்கு ஈரான் காலவரையின்றித் தடைவிதித்துள்ளது!

Close