உலகின் பலம் வாய்ந்த இளம் தலைவராக சவுதி அரேபியா இளவரசர் முஹம்மத் பின் சல்மான்!

blogger-image-1383473507உலகின் பலம் வாய்ந்த இளம் தலைவராக சவுதி அரேபிய முடிக்குறிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உறுவெடுத்துள்ளதாக லண்டனை தளமாக கொண்டு இயங்கும் முன்னணி நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. தனது பன்னிரண்டு வயதில் தந்தை சல்மானுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள ஆரமபித்த முஹம்மத் பின் சல்மான் இளம் வயதில் மாகண கவர்னராக பதவி வகித்தது அனுபவத்துடன் தனது 29 வது வயதில் சவுதி அரேபியாவின் தற்போதய பாதுகாப்பு அமைச்சராகவும் பதவிவகித்து வருகிறார்.

மன்னர் சல்மான் ஞாபக மறதி நோயால் கடும் அவதியுற்று வருவதால் இளவரசர் முஹம்மதே நிருவாக விடயங்களை கவனித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள குறித்த நாழிதல் அண்மையில் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நகர்வுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.பொதுவாக இங்கிலாந்து அமெரிக்கா நாடுகளில் உயர்கல்வியை தொடரும் சவுதி இளவரசர்கள் அண்மைக்காலங்களில் பல சர்ச்சைகள் மாட்டிக்கொண்டது உலக அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது.

சவுதி அரேபிய பல்கலைகழகத்தில் தனது சட்ட முதுமானி பட்டத்தை பெற்றுள்ள முடிக்குறிய இளவரசர் முஹம்மத் நிருவாக திறமைகளில் மட்டுமல்லாமல் ஒழுக்க விழுமியங்களிலும் சிறந்தவர் என லண்டனை தளமாக கொண்டு இயங்கும் முன்னணி நாளிதழ் சுட்டிக்கட்டியுள்ளது.

Close