அதிரை மின்சார வாரியத்தினரின் அரைகுறை வேலை! அவதிப்படும் மக்கள்! (படங்கள் இணைப்பு)


அதிரை மின்சார வாரியத்தால் கடந்த சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாக அதிரையில் உள்ள பல மின்கம்பங்கள் மாற்றப்பட்டு புதிய மின்கம்பங்கள் பொருத்தப்பட்டன. மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தாலும் ஒரு சில இடங்களில் இந்த மின்சார வாரியத்தினரின் அரைகுறை வேலை காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அதிரை ஜாவியால் எதிரில் அமைந்துள்ள ட்றான்ஸ்பார்மர் கம்பங்கள் மிகவும் பழுதடைந்திருந்த காரணத்தினால் புதிய கம்பங்கள் மாற்றப்பட்டன. இதனை அடுத்து பழுதடைந்த கம்பங்களை அதே இடத்திலேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இது அந்த பகுதியில் அகற்றப்படாமல் கேட்பாரற்று கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.

இது குறித்து சமுக ஆர்வலர் ஹாலிக் மரைக்கா அவர்கள் நம்மிடம் கூறியதில் “நான் பல முறை அதிரை மின்வாரிய உதவிப் பொறியாளிரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளேன், எந்த நடவடிக்கையும் இல்லை” என்றார். இந்த பழைய மின்கம்பங்களை விரைந்து அகற்றுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

  

Close