குவைத்தில் பிழையுடன் கூடிய பொது மன்னிப்பு அறிவிப்பு!

3defe62d-ce22-4a9b-a371-ebc157ac3f11குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கு சில நிபந்தனைகள் மற்றும் பிழையுடன் கூடிய பொது மன்னிப்பு குவைத் அரசு இன்று முதல் அறிவித்துள்ளது மற்றும் வேற வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி:
1) குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்கள் பிழை கட்டி தங்களுடைய நாடுகளுக்கு சென்று திரும்பும் வேறு வேலைக்கு திரும்பவும்குவைத்திற்கு வரும் விதத்திலும் குவைத் தமிழ் பசங்க.

2) குவைத்தில் இருந்த படி பிழைகட்டி வேறு வேலை தேடி கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

குவைத் தமிழ் பசங்க :

இதற்கு முக்கியமாக சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்கள் நீங்களாக அதற்கான குவைத் அரசு அமைத்துள்ள வெளிநாட்டு வாழ் நபர்களுக்கான அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று இதற்காக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.Sponsore-ஐ விட்டு வெளியே வந்த நபர்கள் மீது அவர்களுடைய குவைத்திகள் புகார் செய்துள்ள வெளிநாட்டினர் குவைத் அரசின் சட்ட அதிகாரிகள் அனுமதி அளித்தால் மட்டுமே குவைத்தில் இருந்த படி பிழைகட்டி வேறு வேலை தேடி கொள்ள முடியும் . ஆனால் இவர்கள் தங்களுடைய நாடுகளுக்கு சென்று விட்டு திரும்பும் வேறு வேலைக்கு குவைத் வர முடியும்.ஆனால் இதற்கு எல்லாம் பிழை கட்டியே ஆக வேண்டும்.
இதை தவிர குவைத்தில் தற்போது நடக்கு சோதனை இந்த பொது மன்னிப்பு காலத்திலும் சோதனை தொடரும் எனவும் அப்படி பிடிபடும் நபர் குவைத்திற்கு வரமுடியாத படி தடை விதிக்கப்படும் மற்றும் இது வரை பிடிபட்டு சிறையில்உள்ளவர்கள் பிழைகட்டி பிறகே நாடு கடத்தப்படுவார்கள்.

மொத்தத்தில் பிழை கட்டியே ஆக வேண்டும்.இதை தவிர கடந்த வாரம் உயர் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள 110000 நபர்களுக்கு பிழையில்லாமல் பொது மன்னிப்பு வழங்கும் எண்ணம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். இதனால் அரசுக்கு பெரிய வருமான இழப்பு ஏற்படும் என்றும் மற்றும் இது இவர்களை போன்று மற்றவர்களுக்கு சட்டத்தை மீற தூண்டுதலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது இந்தியர்கள் உட்பட குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளநபர்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.ஆனால் இந்த பொது மன்னிப்பு எத்தனை நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

Close