முத்துப்பேட்டையில் புஹாரி ஷரீப் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்ப்பு!

JAVமுத்துப்பேட்டை அரபு சாஹிப் பள்ளி வாசலில் ஒவ்வொரு ஆண்டும் புகாரி சரீப் நிகழ்ச்சி 30 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல கடந்த மாதம் 13-ம் தேதி 26-வது ஆண்டு புகாரி சரீப் நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிலையில் நேற்று நிறைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் காலை 8 மணிக்கு துவங்கி மதியம் 12 மணி வரை இஸ்லாமியர்களின் பயான் மற்றும் துஆ நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. முடிவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்குப்பெற்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வந்திருந்தவர்களுக்கு குளிர்பானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Close