அதிரையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுகளை நீண்ட வரிசையில் நின்று வாங்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)

 தமிழக அரசு சார்பாக வருடா வருடம் பொங்கள் சிறப்பு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவுபடி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளில் இன்று இந்த பொருட்களை வழங்கும் பணி துவங்கியது. அதிரை  இன்று காலை துவங்கிய பொங்கள் பொருட்கள் வழங்கும் நிகழ்வை அ.தி.மு.க நிர்வாகிகள் துவங்கி வைத்தனர்.

இதில் வழங்கப்படும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சீனி, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவற்றை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். இதில் அதிரை துணை பேரூராட்சி தலைவர் பிச்சை, அதிரை அ.தி.மு.க துணை செயலாளர் தமீம், வார்டு கவுன்சிலர் உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் ரேசன் கடைவாரியாக சென்று இந்த பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து வருகின்றனர்.
  
  

Close