சவுதி-இரான் மோதல் அரபு லீகின் அவசரக் கூட்டம்!

160106071922_arab_league_afp__512x288_afp_nocreditசவுதி அரேபியாவின் வேண்டுகோளை அடுத்து, அரபு லீகின் அவசரக் கூட்டம் கெய்ரோவில் இன்று நடைபெறுகிறது.அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்இந்தக் கூட்டத்தில் அரபு லீகின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.இரானிலுள்ள சவுதி தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விவாதிக்க இந்தக் கூட்டம் சவுதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெறுகிறது.

சவுதி அரேபியா ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மதகுரு ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜீய உறவுகள் மோசமடைந்தன.தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகம் தாக்குதலுக்குள்ளானது.இராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகள் இரானுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், இக்கூட்டத்தில் முடிவு ஏதும் ஏற்படுவதற்கு சிறிய அளவே வாய்ப்புகள் உள்ளன என்று கெய்ரோவிலுள்ள பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

சவுதி அரேபியாவின் நெருங்கிய நேச நாடுகள் கூட தமது முழுமையான ஆதரவை அந்நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.

Close