அதிரையின் திருமண விருந்தில் பரோட்டாவுக்கு பதிலாக சப்பாத்தி!

  அதிரையில் கடந்த பல ஆண்டுகளாக திருமணத்தின் போது காலை அல்லது இரவு நேர விருந்து நிகழ்ச்சியில் வழக்கமாக பரோட்டா, இடியாப்பம், ரவ்வா, கறி ஆணம், கடற்பாசி உள்ளிட்டவைகள் இருக்கும். ஆனால் இதில் பரோட்டா மைதாவில் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கு பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த பரோட்டா குறித்து மக்களும் சமிபத்திய ஆண்டுகளில் விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. 

அதிரையில் கடந்த மாதங்களில் நடைபெற்ற திருமண விருந்துக்களில் இந்த பரோட்டா இடம் பெற்றது. இந்நிலையில் இன்று அதிரை நடுத்தெருவில் நடைபெற்ற ஒரு இரவு நேர திருமண விருந்தில் மேற்குறிப்பிட்ட உணவு பொருட்களில் பரோட்டாவுக்கு பதிலாக சப்பாத்தி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கோதுமையில் செய்யக்கூடிய சப்பாத்தி உணவுக்கு மிகவும் வலிமை தரக்கூடியது. இதனை அதிரைக்கு அறிமுகம் செய்த அந்த திருமண வீட்டாருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு இதனை இனிவரும் திருமண விருந்துகளில் பிறரும் முயற்சி செய்தால் பரோட்டா என்னும் பசை உணவை ஓரங்கட்டுவதோடு, உடலுக்கு நண்மைதரும் சப்பாத்தியை உண்ண ஆர்வமளிக்கலாம். 

Close