அதிரை வாகன ஒட்டிகளூக்கு மகிழ்ச்சியான செய்தி!

download (4)சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 856 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். இந்த விலை மாநில வரிகளுக்கு ஏற்ப மாறும்.

Close