கலாமின் கனவுகளை நனவாக்க ராமேஸ்வரத்தில் ‘கலாம் வாரியர்ஸ்’ !

Tamil_DailyNews_1920543909073கலாமின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் ராமேஸ்வரத்தில் ‘கலாம் வாரியர்ஸ்’ என்ற புதிய இளைஞர் அமைப்பின் துவக்க விழா நடந்தது. முன்னாள் ஜனாதிபதி கலாமின் சிந்தனைகளை நனவாக்கும் வகையில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் பல்வேறு அமைப்புகளை துவக்கி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் கலாமின் பெயரில் நேற்று ‘கலாம் வாரியர்ஸ்’ என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி செயலாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் துவக்க விழா ராமேஸ்வரத்தில் நடந்தது. இசையமைப்பாளர் கங்கை அமரன் ‘கலாம் வாரியர்ஸ்’ அமைப்பை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

கலாமின் கனவுகளை, இந்த அமைப்பின் மூலம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். நாட்டில் ஊழலற்ற எதிர்காலத்தை உருவாக்குவோம். இளைஞர்களை பொதுவான விசயங்களில் பங்கெடுக்க வைப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். தற்போது இந்த அமைப்பில் 500 இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். இந்திய அளவில் இந்த அமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்’’. என்றார். நிகழ்ச்சியில் இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் மயில்சாமி, ராமகிருஷ்ணமடம் நிர்வாகி சுவாமி சாரதானந்தா, கலாமின் அண்ணன் பேரன் ஷேக்சலீம் உட்பட பலர் பேசினர். தொடர்ந்து பேக்கரும்பில் உள்ள கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நன்றி:தினகரன்

Close