Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் இரண்டு மார்க்கெட்டிலும் மீன்கள் வரத்து அதிகரிப்பு

மீன்

அதிரை கடைத்தெருவில் அமைந்துள்ள பெரிய மார்க்கெட்டிலும், முத்துப்பேட்டை ரோட்டில் அமைந்துள்ள பெண்கள் மார்க்கெட்டிலும் இன்று மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.

இங்கு முட்டப்பாரை, மாசி மீன், சோம்புப்பாரை , சீலா மீன், பன்னா மீன் சடையன் மீன் வாவல்,கரு வாவல், அஞ்சலா மீன், கால மீன், வால மீன், முறல் மீன், அறல் மீன், கெடுத்த மீன், இறால், கெண்டை மீன், நண்டு, வெள்ளி மீன்(தேஸை பொடி) உள்ளிட்ட பலவகையான மீன்கள் அதிகளவில் காணப்பட்டது. மேலும் இறால், நண்டுகளும் இங்கு அதிகமாக காணப்பட்டது. மேலும் இதனை மக்கள் மிக ஆர்வமாக வாங்கிச்செல்கின்றனர்.

புகைப்படம்: இஜாஸ் மற்றும் ஜைத் (அதிரை பிறை)