அதிரை மண்வாசனையுடன் கொட்டும் ஜில் ஜில் மழை!

அதிரையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் தவித்தனர் மக்கள். வீட்டுக்குள் இருப்பவர்களையும் இந்த கோடை வெயில் விட்டு வைக்கவில்லை. சமையலரையில் இருக்கும் பெண்களும் இதனால் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டதால் மக்களின் துயரம் இரட்டிப்பானது.

இந்நிலையில் தற்போது அதிரையில் இஷா தொழுகை முடிந்த சில நிமிடங்களில் சிறிய தூரலாக உறுவெடுத்த மழை தீவிரமடைந்து நன்றாக பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close