துபை ட்ராம் – துபாயில் வாகனம் ஓட்டுநர்களின் கவனத்திற்கு !

ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே
துபையில் இருக்கும் அனைத்து DRIVING SCHOOL களிலும் ட்ராம் சாலைகளுக்கான
சிறப்புப் போக்குவரத்துக் குறியீடுகள் பற்றி பயிற்றுவிக்கப்பட்டது.

இந்நிலையில், ட்ராம் போக்குவரத்திற்கான தொடக்க விழா நேற்று கோலகலமாக நடந்தேறியது.

இந்த சாலையின் விதிகளை மீறுவோர் மீது மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என RTA அறிவித்துள்ளது.

ட்ராம்
வரும் சமயத்தில் சிவப்பு சமிஞ்கை விளக்கினை மதிக்காமல் மீறி சந்திப்பில்
நுழைந்து ட்ராம் மீது மோதி சேதம் ஏறுபடுத்தும் வண்ணம் வாகனம்
ஓட்டியவருக்கு
30,000 திர்ஹம்     (ஏறத்தாழ 5 இலட்சம் ரூபாய்) அபராதம். ஒரு ஆண்டிற்கு ஓட்டுநர் உரிமம் முடக்கம்.


சேதம்
விளைவிக்காமல் அதே நேரத்தில் சிவப்பு சமிஞ்கை விளக்கினை மதிக்காமல் மீறி
சந்திப்பில் நுழைந்து இருந்தால், 5000 திர்ஹம் அபராதம். மூன்று மாதங்ளுக்கு
உரிமம் பறிப்பு.

யாரேனும் மனிதரிகளுக்குக் காயமேற்படும் வண்ணம்
விபத்தினை ஏற்படுத்தியிருந்தால் 15,000 திர்ஹம் ( ஏறத்தாழ இரண்டரை இலட்சம்
ரூபாய்) அபராதம் மற்றும் ஆறு மாதங்களுக்கு உரிமம் பறிப்பு. மரணமேற்படுத்தியிருப்பின், 30,000 திர்ஹம், ஒரு வருட உரிமம் பறிப்பு.

 

Advertisement

Close