Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை நாளை நடைபெறும் பத்திரிக்கையாளர் பயிலரங்கம் (TRAILER VIDEO)

pp

தினம் அதிராம்பட்டினம் ALM பள்ளி வளாகத்தில் எக்ஸ்பிரஸ் மீடியா ட்ரஸ்ட் சார்பில் மாபெரும் பத்திரிக்கையாளர்கள் பயிலரங்கு நடைபெற உள்ளது.

இதில் தமிழ்இந்து நாளிதளின் முதன்மை ஆசிரியர் சாதிக் , NEWS 7 தொலைகாட்சியின் துணையாசிரியர் குத்புதீன் , மற்றும் பத்திரிக்கையலர்களுக்கு தேவையான அடிப்படை பண்புகள் குறித்த பயிற்சி அளிப்பதற்காக புதிய விடியல் பத்திரிக்கையின் துணையாசிரியர் ரியாஸ் அகமது உள்ளிட்ட முன்னணி ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.

பன்னூலாசிரியர் அதிரை அஹமதுகாக்கா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் . இப்பயிலரங்கு சரியாக காலை 9.;45மணிக்கு தொடங்கும் இவ்வரங்கில் முன் பதிவு செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர்.

பயிற்சியின்போது தேனீர், சிற்றுண்டி , மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பயிற்சி முடியும் வரை வெளியில் செல்ல பயிர்ச்சியாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே பயிற்சி பெறுபவர்கள் தயுவு கூர்ந்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே அரங்கிற்கு வந்து ஒத்துழைப்பு தர அன்போடு கேட்டுகொள்கிறோம்.

இந்நிலையில் எக்ஸ்பிரஸ் மீடியா ட்ரஸ்ட் பயிலரங்கு விளம்பரத்திற்க்காக விளம்பர சிறப்பு காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.