FLASH NEWS: அதிரையில் சாலை விபத்து! அதிரை இளைஞர் படுகாயம்!

wpid-emergency-and-accident-sign1774530171.jpgஅதிரை கல்லூரி சாலையில் இன்று மதியம் இரண்டு பைக்குள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அதிரையை சேர்ந்த இளைஞருக்கு கால்களில் பலத்த காயமும் மிலாரிக்காட்டை சேர்ந்த இளைஞருக்கு முகத்தில் காயமும் ஏற்பட்டன. இதனை அடுத்து காயமடைந்தவர்களை அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் மீட்டு ஆட்டோவில் ஏற்றி அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவ்விருவருக்கும் தீவிர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து மருத்துவரின் அறுவுறுத்தலின் பேரில் அதிரையை சேர்ந்த இளைஞர் கூடுதல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.

குறிப்பு: விபத்துக்குள்ளானவர்களின் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க அதிரை பிறையில் புகைப்படங்கள், காயமடைந்தவரின் விபரங்கள் பதிவிடப்படவில்லை

Close