ஆப்ரிக்காவில் உள்ள மிக எளிய பள்ளிவாசல்!

masjidபெரிய டூம்கள் கிடையாது: பளபளக்கும் சலவைக் கல் கிடையாது: பஞ்சு மெத்தை போன்ற விரிப்புகள் கிடையாது: நறுமணம் கமழ வாசனை திரவியங்கள் கிடையாது:

ஒன்றே ஒன்றுதான் அந்த புதிய இஸ்லாமியரிடம் உள்ளது. அதுதான் அசைக்க முடியாத இறை நம்பிக்கை.

இதைத்தான் இறைவனும் விரும்புகிறான். அன்றைய நபித் தோழர்களும், நபிகளும் இது போன்ற பள்ளிவாசல்களில்தான் ஆரம்ப காலங்களில் தொழுதுள்ளார்கள். அதே போன்ற உறுதியையும் மன வலிமையையும் இந்த இளைஞனுக்கும் இறைவன் தந்தருள்வானாக!

ஏக இறைவனை மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கைக் கொண்டோரைக் கேலி செய்கின்றனர். இறைவனை அஞ்சியோர் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். இறைவன் நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.

-குர்ஆன் 2:212

Close