அதிரையில் சிறப்பாக துவங்கியது போலியோ சொட்டு மருந்து முகாம் (படங்கள் இணைப்பு)

poliyo

இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும், இந்திய ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் முதல் கட்டமாக ஜனவரி 17 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும்.
இந்நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் 43,051 சொட்டு மருந்து மையங்கள், சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையம், தொடருந்து நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத் தலம், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் போன்ற பகுதிகளில் இதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய பெருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்முகாம்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தவகையில் அதிரையை பொருத்துவரை அனைத்து வார்டுகளிலும் இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டு மக்கள் சொட்டு மருந்து போடுவதற்காக தங்கள் குழந்தைகளை அழைத்து செல்கின்றனர்.
படங்கள்: அதிரை கடற்கரைத்தெருவில் சொட்டு மருந்து செலுத்தும் போது…
Close