திருச்சியில் கடத்தப்பட்ட சிறுவன் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அதிரை பிறை நிர்வாகி! (வீடியோ)

திருச்சியில் கடந்த 4ம் தேதியன்று தென்னூர் பகுதியை சேர்ந்த ஹர்சத்கான் என்ற 2 வயது சிறுவன் மாயமானதாகவும் அதனை அதிரை பிறையில் செய்தியாக பதிந்து உதவிடுமாறும் அன்றைய தினம் அச்சிறுவனுடைய தந்தையின் நண்பர் நம் தளம் நிர்வாகி நூருல் அஹமது அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்தார்.

இதனை அடுத்து அது நம் தளத்தில் வெளியிடப்பட்டு புகைப்படம் முகநூலில் பகிரப்பட்டது. இச்செய்தியை தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளவர்கள் முகநூலிலும் வாட்ஸ் ஆப்பிள் போன்ற சமுக வலைதளங்களில் பகிந்தனர்.

இதனை அடுத்து நேற்று நம் நிர்வாகி நூருல் அவர்களை தொடர்பு கொண்டு குழந்தை கடத்தப்பட்டதாகவும் அதை கடத்தியது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெனிபர் என்ற பெண் என்று தெரிவித்தார். இதனை அடுத்து இன்று அக்குழந்தையின் தந்தை நம்மை தொடர்புகொண்டு நேரில் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து நமது தளம் நிர்வாகி காலித் அகமது அவர்கள் குழந்தையின் இல்லம் சென்று அக்குடும்பத்திற்க்கும் குழந்தைக்கும் ஆறுதல் கூறினார்.

இதில் அச்சிறுவனின் தந்தை நம் நிர்வாகி காலித் அவர்களிடம் நன்றியை தெரிவித்துக்கொண்டார். இது குறித்து அளித்த பேட்டி….

Advertisement

Close